காஷ்மீர் மாணவர்களை தமிழகத்திற்கு கொண்டுவர நடவடிக்கை... உதவி எண் வழங்கிய தமிழக அரசு...! - முதலமைச்சர் - Seithipunal
Seithipunal


காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, ''ஆப்ரேஷன் சிந்தூர்'' என்ற பெயரில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத நிலைகளை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தின.

இந்த "ஆப்ரேஷன் சிந்தூர்" நடவடிக்கையை தொடர்ந்து, எல்லை பகுதிகளில் இருநாடுகளும் வான்வெளி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் அப்பகுதியில் பதற்றமாக சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும்,  இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ''ஏவுகணைகள் மற்றும் டிரோன்'' தாக்குதலை அறவே முறியடித்து வருகிறது.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜம்மு காஷ்மீர் பகுதியிலுள்ள தமிழக மாணவர்கள் பாதுகாப்பாக தமிழ்நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசு:

தமிழக அரசு," ஜம்மு காஷ்மீரில் கல்வி பயில சென்றுள்ள தமிழக மாணவர்கள் வெளிநாடு வாழ் தமிழர் நலவாரியத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

டெல்லியில் உள்ள தமிழ்நாடு பவனும் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருவதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.நிலைமை சீரடைந்தவுடன் மாணவர்கள் பாதுகாப்பாகவும் விரைவாகவும் அழைத்து வரப்படுவார்கள்" என உறுதியளித்துள்ளது.

மேலும், காஷ்மீரின் பேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் பயிலும் மாணவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.காஷ்மீரில் உள்ள தமிழக மாணவர்கள் தொடர்பு கொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • உதவி தேவைப்படும் மாணவர்கள் 9994433456, 7373026456 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.
  • உதவி தேவைப்படும் தமிழக மாணவர்கள் nrtwb.chairman@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளலாம்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Steps taken to bring Kashmiri students to Tamil Nadu Tamil Nadu government has provided a helpline number Chief Minister


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->