அரபிக்கடலில் தாயாராக நிற்கும் இந்திய கடற்படை..!!
indian navy ready in arabian sea for operation sindoor
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் மேற்கொண்டு வரும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து கடந்த 36 மணி நேரத்தில் எல்லையில் நிலைமை மோசமடைந்துள்ளது. அதாவது, பாகிஸ்தானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதலை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.

இதனால், இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதையடுத்து இந்திய கடற்படை அரபிக்கடல் முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் மீனவர்கள் அரபிக்கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், இந்திய கடற்படை துறைமுகங்கள், கடற்பகுதிகளை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நிகழ்த்தினால் பதிலடி கொடுக்க போர் விமானங்களுடன் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் ஒவ்வொரு அசைவும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
English Summary
indian navy ready in arabian sea for operation sindoor