முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் மறைவு - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
CM MK Stalin Condolence Satyapal Malik
ஜம்மு காஷ்மீரின் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் உடல்நலக் குறைவால் காலமானார். டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனை அவரது மரணத்தை உறுதி செய்துள்ளது.
2018-19 ஆம் ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் கவர்னராகப் பணியாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சத்யபால் மாலிக்கின் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில், "சத்யபால் மாலிக்கின் மறைவு எனக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அமைதியுடன் முன்னேறிய அவர், அதிகாரச் சூழலிலும் உண்மையைப் பேசத் தயங்காதவர். அவருடைய பதவிகள் மட்டுமின்றி, அவர் எடுத்த துணிச்சலான அரசியல் நிலைப்பாடுகளும் வரலாற்றில் இடம் பிடிக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.
English Summary
CM MK Stalin Condolence Satyapal Malik