புற்றுநோய் ஏற்பட காரணங்கள் மற்றும் வராமல் தடுக்கும் வழிமுறைகள்...!
Causes of cancer and ways to prevent it
புற்றுநோய் ஏற்படக் காரணங்கள் :
உடலுக்குள் மெல்ல மெல்ல உடலின் அடிப்படையாக உள்ள உயிரணுக்களைப் (செல்கள்) பாதிக்கும் நோயைத்தான் புற்றுநோய் என்பதாகும்.உயிரணுக்களின் வளர்ச்சி மற்றும் இறப்பைக் கட்டுப்படுத்தும் மரபணுக்களில் மாற்றங்கள் ஏற்பட்டு புற்றுநோயாகத் தோன்றுகிறது.

புகையிலை உபயோகித்தல், உணவுமுறைகள், சூரியனின் கதிர்வீச்சு, மாசு மற்றும் நச்சுத்தன்மையுடைய வேலை மற்றும் சுற்றுப்புறச் சூழ்நிலை, வாழ்க்கைமுறை ஆகியவை புற்றுநோய் வரக் காரணமாக இருக்கிறது.
இத்தகைய மரபணு மாற்றங்கள் பெற்றோர்களிடம் இருந்து பரம்பரையாகவும் வருகிறது.சில வைரஸ்களும், புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கின்றன. உதாரணமாக எச்.ஐ.வி, ஹெபடைட்டிஸ் போன்றவை.பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு வரலாம்.
புற்றுநோய் வராமல் தடுக்கும் முறைகள்:
ப்ளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது.புகையிலை பயன்படுத்தக்கூடாது.கொழுப்பான உணவைக் குறைத்து, அதிகளவு காய்கறிகள் பழங்கள் மற்றும் முழுதானிய வகைகளை உட்கொள்ளலாம்.முறையான உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
சுறுசுறுப்பான வாழ்க்கை முறையினைக் கைக்கொள்ள வேண்டும்.காலை 10 மணியிலிருந்து 4 மணிவரை சூரிய ஒளி படாமல் தவிர்க்க வேண்டும்.40 வயதினைக் கடந்தவர்கள் மருத்துவரைக் கலந்து, உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
English Summary
Causes of cancer and ways to prevent it