துணி காயப்போட கட்டியிருந்த கயிற்றால் வந்த வினை...! அநியாயமாக பறிபோன சிறுமி உயிர்...!
cloth rope tied around little girl who was unjustly life taken away
திண்டுக்கல் பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள சித்தரேவு கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி ராமச்சந்திரன்,இவரது மனைவி சின்னம்மாள். இந்த தம்பதிக்கு சிவகிருஷ்ணன் என்ற 14 வயது மகனும், நந்தனா என்ற 11 வயது மகளும் உண்டு. இவர்கள் இருவரும் சித்தரேவிலுள்ள அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர்.

இதில் சிவகிருஷ்ணன் 9-ம் வகுப்பும், நந்தனா 6-ம் வகுப்பும் படித்து வந்தனர்.இதில் வழக்கம்போல் நேற்று நந்தனாவின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்ட நிலையில், சிவகிருஷ்ணனும் வெளியே சென்றுவிட்டான் போல.அதன் பிறகு நந்தனா பள்ளிக்கு புறப்பட்டு கொண்டிருக்கையில், வீட்டிலிருந்த பீரோவின் மேற்பகுதியில் புத்தகம் ஒன்று இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதனை நந்தனா கட்டிலில் நின்று கொண்டு பீரோ மீது இருந்த புத்தகத்தை எடுக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி வீட்டின் உள்ளே துணி காய போடுவதற்காக கட்டியிருந்த கயிற்றில் விழுந்துள்ளார்.
இந்த அசம்பாவித்ததில் சிறுமியின் தலை கயிற்றில் சிக்கிக் கொண்டதால் அதிலிருந்து மீண்டுவர சிறுமி போராடியுள்ளார்.ஆனால் அதிலிருந்து வெளியே வர முடியாமல், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சோக சம்பவம் குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
cloth rope tied around little girl who was unjustly life taken away