கைதிகள்-வார்டன்கள் இடையே பயங்கரம்! பிளேடால் கீறி கொண்ட கைதிகள்! கோவை சிறையில் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


கோவை மத்திய சிறையில் கைதிகளும் சிறை வார்டன்களுகம் மோதி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாள்தோறும் சிறையில் இருக்கும் கைதிகளுக்கு நேர்காணல் போன்ற நடத்தி பயிற்சி கொடுப்பது வழக்கம். அவ்வாறு இன்று காலை சிறை கைதிகள் வெளியே சென்று உள்ளே வரும்போது கைதிகளை சிறை காவலர்கள் சோதனை செய்ய முயற்சி செய்து உளளனர். 

அப்போது கைதிகளுக்கும் காவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது முதலில் மோகன்ராஜ் மற்றும் கோகுல் என்ற இரு காவலர்களை கைதிகள் தாக்கியுள்ளனர். அவர்களை தடுக்க வந்த ஜான் மற்றும் விமல்ராஜ் என்ற மேலும் இரு காவலர்களையும் தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதல் படுகாயம் அடைந்த நான்கு காவலர்களும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சவரம் செய்ய கொடுக்கப்பட்ட பிளேடால் கையை கீறிக்கொண்ட 7 கைதிகள் சிறையில் உள்ள மரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உயர் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கைதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதனை அடுத்து காயம் அடைந்த கைதிகளுக்கு சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சிறைத்துறையில் டிஐஜி சண்முகசுந்தரம் கோவை மத்திய சிறைக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Clash between inmates and wardens in Coimbatore Central Jail


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->