நாளை பொது வேலை நிறுத்தம்: பங்கேற்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை: தலைமைச்செயலாளர் எச்சரிக்கை..! - Seithipunal
Seithipunal


நாளை நடக்கவிருக்கும் பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (ஜூலை 09) பொது வேலைநிறுத்தத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச சம்பள உயர்வை அதிகரிக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், படித்த இளைஞகளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும், மத்திய அரசின் தொழிலாள விரோத சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைத்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இந்த போராட்டத்திற்கு தமிழகத்தில், தி.முக.,வின் தொ.மு.ச., இடதுசாரிகளின் சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யு.சி., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அத்துடன், மக்களை பாதிக்காத வகையில், போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சேவை உள்ளிட்டவை வழக்கம் போல் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச்செயலாளர் எச்சரித்துள்ளார். மேலும், சம்பள நிறுத்தம், துறைரீதியான நடவடிக்கை என ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chief Secretary warns of disciplinary action against government employees and teachers participating in general strike tomorrow


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->