"இலக்கிய மலர் 2023" என்ற சிறப்பு மலரை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


இன்று செய்தி மக்கள் தொடர்புத் துறையின் தமிழரசு இதழின் சார்பில் தயாரிக்கப்பட்ட 'இலக்கிய மலர் 2023' என்ற சிறப்பு மலரினை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார். 

அந்த மலரின், முதல் பிரதியை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பும், இரண்டாம் மற்றும் மூன்றாம் பிரதிகளை சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் புகழ்பெற்ற ஓவியர் டிராட்ஸ்கி மருது ஆகியோர் பெற்றுக்கொண்டனர். 

இந்த நிலையில், இந்த மலர் வெளியிட்டு விழா குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய 'டுவிட்டர்' பதிவில் தெரிவித்து இருப்பதாவது:- 

"இலக்கிய திருவிழா, சொற்பொழிவுகள், புதிய நூலகங்கள், புத்தக கண்காட்சிகள் என்று தமிழுக்கு மகுடம் செய்யும் நம்முடைய அரசில், மூத்த படைப்பாளிகள் மற்றும் ஆய்வாளர்களின் பங்களிப்புடன் இன்று இலக்கிய மலர்-2023 வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும், இந்த மலரை தயாரித்துள்ள செய்தி மக்கள் தொடர்புத் துறைக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்! எங்கும், எதிலும் தமிழ் உயர பறக்கட்டும்!. என்று அதில் பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chief Minister Stalin unveiled flower name "Literary Flower 2023".


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->