முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக திருச்சி செல்கிறார்! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நாளை மறுதினம் திருச்சி செல்கிறார். வரும் 28ஆம் தேதி காலை 9 மணிக்கு சிறப்பு விமான மூலம் திருச்சி செல்லும் அவர் அங்கிருந்து காட்டூர் செல்கிறார். பின்னர் காலை 10:30 மணி அளவில் காட்டூர் ஆதிதிராவிடர் பெண்கள் உயர்நிலை பள்ளியில் நடைபெறும் அறிவியல் நிகழ்ச்சி தொடக்க விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

அதன்பின் அங்கிருந்து புறப்படும் மு.க ஸ்டாலின் பெரம்பலூர் சென்று பகல் 12:30 மணியளவில் கோத்தாரி நிறுவனத்தின் புதிய ஆலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். அந்நிகழ்ச்சி முடித்த பின்னர் அங்கிருந்து புறப்பட்டு அரியலூர் மாவட்டத்தில் உள்ள விருதுநகர் மாளிகையில் அன்று இரவு ஓய்வு எடுக்கிறார். 

அதன் பின்னர் வரும் 29ஆம் தேதி காலை 9:30 மணியளவில் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதன் பின்னர் காலை 10:45 மணிக்கு அரியலூரில் இருந்து திருச்சிக்கு சென்று அங்கிருந்து பகல் 12:30 மணி அளவில் சென்னைக்கு திரும்புகிறார். முதல்வர் ஸ்டாலின் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ளாதால் மாவட்ட நிர்வாகிகள் சிறப்பு ஏற்பாடு செய்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chief Minister Stalin is going on a two day tour to Trichy


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->