முதலமைச்சர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 800 பேர்! ஒருங்கிணைத்தவர்களை கைது செய்த போலீசார்!
Chief Minister office besieged 800 people coordinated 3 people arrested
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 2020 ஆம் ஆண்டு 9613 பேர் கேங்மேன் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் இவர்களில் 5493 பேருக்கு பணி வழங்கப்படவில்லை என தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் பணிக்கு தேர்வாகாத சுமார் 1000 பேர் நேற்று பெரவள்ளூரில் உள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எம்.எல்.ஏ அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி செய்தனர்.
இதற்காக எம்.எல்.ஏ அலுவலகம் நோக்கி செல்ல முயன்றவர்களை அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி அதிரடியாக கைது செய்தனர்.
மேலும் கைதான 800 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பெரவள்ளூரில் போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்கள் யார் என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் சென்னையைச் சேர்ந்த 3 பேர் என தெரியவந்தது.

இதனை அடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை மின்வாரிய அலுவலகத்தை பணிக்கு தேர்வானவர்கள் முற்றுகையிட போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் அண்ணா சாலையில் உள்ள அலுவலகத்தில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலைய பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
Chief Minister office besieged 800 people coordinated 3 people arrested