பறவை காய்ச்சல் : நீலகிரியில் கறிக்கோழி மற்றும் லவ் பேர்ட்ஸ் கொண்டு வர தடை.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம் மற்றும் ஆலபுழா உள்ளிட்ட மாவட்டங்களில் பறவை காய்ச்சல் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் அரசின் உத்தரவு படி, சுகாதாரம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறையினர் கோட்டயம் மற்றும் ஆலபுழா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள. பண்ணையில் ஆய்வு மேற்கொண்டனர்.

அந்த ஆயிவில் சுமார் எட்டாயிரம் கோழி மற்றும் வாத்துகளை அதிகாரிகள் அழித்தனர். இதையடுத்து மற்ற மாவட்டங்களில் உள்ள பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்கு இடையே கேரளாவில் இருந்து,  சுற்றுலா மற்றும் சரக்கு வாகனங்கள் நீலகிரி மாவட்டம் கூடலூர் வழியாக கர்நாடகா மற்றும் ஊட்டிக்கு செல்கிறது.

இதன் மூலம். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் பறவை காய்ச்சல் பரவாமல் இருப்பதற்கு மாநில எல்லை வழியாக வரும் வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி கிருமி நாசினி தெளிக்கின்றனர்.

அதேபோல் மாவட்டத்தில் உள்ள கூடலூர், நடுகாணி, பாட்டவயல், சோலாடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் கால்நடை பராமரிப்பு துறையினர் முகாமிட்டு கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கின்றனர்.

இதுமட்டுமல்லாமல் வயநாடு பகுதியில் இருந்து எருமாடு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களுக்கு கறிக்கோழிகள் கொண்டு வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதைத்தான் தொடர்ந்து, லவ் பேர்ட்ஸ் போன்ற பறவை இனங்களையும் கொண்டு வருவதற்கு தடை விதிக்கபட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chicken hen and love birds ban in neelagiri for birds fever


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->