சென்னையில் நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறல்! Gpay மூலம் சிக்கியது எப்படி?!
Chennai women harass Youth arrested
சென்னையில் நடந்து சென்ற பெண்களுக்கு எதிராக பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு வந்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
முகப்பேர் பகுதியில் தனியாக சென்ற 19 வயது இளம்பெண்ணை இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞர் தொடர்ந்து பாலியல் வகையில் சீண்டியதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், குற்றவாளி அருகிலுள்ள டாஸ்மாக் கடையில் ஜிபே மூலம் பணம் செலுத்திய தகவலை வைத்து கைது செய்தனர். பின்னர் அவர் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே அவரிடம் நடத்திய விசாரணையில், நீலாங்கரையைச் சேர்ந்த சரத்பாபு (வயது 31) என்ற தனியார் வங்கி வசூல் ஏஜெண்டை போலீசார் கைது செய்தனர்.
மேலும், கைதான சரத்பாபு மீது இதற்கு முன்னரும், எழும்பூரில் நடந்த ஒரு பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்த புகாரில் கைது செய்யப்பட்டு சிறை சென்றிருந்த தகவலும் வெளியாகியுள்ளது.
English Summary
Chennai women harass Youth arrested