ரவுடியின் பெயரைச்சொல்லி தொழிலதிபரிடம் பணம் கேட்டு மிரட்டிய 2 கூஜாக்கள் கைது.!
Chennai Villivakkam 2 Rowdy Arrested By Police Phone Threatening about Money
பிரபல தொழிலதிபரிடம் பிரபல ரவுடி பெயரை சொல்லி பணம் கேட்டு மிரட்டிய விவகாரத்தில், ரவுடியின் கூஜாக்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் உள்ள வில்லிவாக்கம் லட்சுமிபுரம் பகுதியை சார்ந்தவர் எபனேசர். இவர் ஆர்ஜி ஆம்புலன்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று இவரின் அலைபேசிக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர், " அரும்பாக்கம் ரௌடி ராதாகிருஷ்ணன், வரும் 15 ஆம் தேதி நீதிமன்றத்திற்கு வருகிறார். அதன்போது நீ ரூ.50 ஆயிரம் பணம் கொண்டு வர வேண்டும்.
பணம் கொண்டு வர தவறினால், உனது தலை சிதறிவிடும் " என்று கூறி கொலை மிரட்டல் விடுத்தது அழைப்பை துண்டித்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக எபனேசர் வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில், ரவுடி ராதாகிருஷ்ணன் வேலூர் சிறையில் மற்றொரு வழக்கில் கைதாகி சிறையில் இருக்கிறான் என்பது தெரியவந்தது.
அவனது கூட்டாளிகளாக இருக்கும் பாஸ்கர் மற்றும் வில்லிவாக்கம் வடிவேலு ஆகியோர் தொழிலதிபரிடம் பணம் கேட்டு மிரட்டியது உறுதியாகவே, அவர்களை கைது செய்துள்ளனர். வடிவேலு மீது கொலை, கொலை முயற்சி உட்பட 12 வழக்குகள் உள்ள நிலையில், பாஸ்கரின் மீது கொலை, கொலை முயற்சி உட்பட 25 வழக்குகள் உள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Chennai Villivakkam 2 Rowdy Arrested By Police Phone Threatening about Money