சென்னை மக்களே வாய்ப்பை தவறவிடாதீங்க! சென்னை காவல் ஆணையாளர் அருணை நேரில் சந்தித்து முறையிடம்! - Seithipunal
Seithipunal


சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண்,  வரும் ஒவ்வொரு வாரமும், புதன்கிழமை காலை 11.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை வேப்பேரி. காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து குறைதீர் மனுக்களை நேரில் பெற உள்ளார்.

திங்கள் முதல் வெள்ளி வரை காலை 11.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை காவல் கூடுதல் ஆணையாளர் அளவிலானஉயரதிகாரிகளும், வார விடுமுறை நாட்களான, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், துணை ஆணையாளர் அளவிலான காவல் அதிகாரிகள் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைதீர் மனுக்களை பெறுவார்கள்.

இதுகுறித்த அறிவிப்பில், முதலைமைச்சர் ஆணையரகங்கள் மற்றும் காவல் மாவட்டங்களில் காவல் உயர் அதிகாரிகள் பொதுமக்கள் குறை தீர் முகாம்கள் நடத்தி, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க ஏற்கனவே ஆணையிட்டுள்ளார். 

அதன்படி சென்னை பெருநகரில் வசிக்கும் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களின் புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையார் ஆ.அருண், உத்தரவின் பேரில் சென்னை பெருநகர எல்லைக்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் இதர காவல் உயரதிகாரிகள் அலுவலகங்களில் பெறப்படும் அனைத்து புகார்களையும் பரிசீலித்து உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு வருகை தரும் பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் பிரிவு (Public Grievance Cell) செயல்பட்டு வருகிறது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப அவர்கள் வரும் ஒவ்வொரு வாரமும், புதன்கிழமை காலை 11.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை வேப்பேரி, காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து குறை தீர் மனுக்களை நேரில் பெறுவார்.

இதர வார நாட்களான, திங்கள் முதல் வெள்ளி வரை காலை 11.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை காவல் கூடுதல் ஆணையாளர் அளவிலான உயரதிகாரிகளும், வார விடுமுறை நாட்களான, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், துணை ஆணையாளர் அளவிலான காவல் அதிகாரிகள் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைதீர் மனுக்களை பெறுவார்கள்.

சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் செயல்படும் பொதுமக்கள் குறை தீர்க்கும் பிரிவில் மேற்படி காவல் உயரதிகாரிகளிடம் புகார் மனுக்களை சமர்பிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai TN Police Arun IPS Tamilnadu 


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->