குடும்ப சண்டையில் உறவினர்களை துப்பாக்கியால் சுட்ட சையது.. சென்னையில் காலையிலேயே பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


ராமாபுரம் பகுதியில் குடும்ப சண்டையில் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. 

சென்னையில் உள்ள ராமாபுரம் பகுதியை சார்ந்தவர் சையது இப்ராகிம். இவருக்கும், இவருக்கு உறவினர் ஒருவருக்கும் குடும்ப சண்டை இருந்து வந்ததாக தெரியவருகிறது. இதனால் இவர்களுக்குள் அவ்வப்போது வாக்குவாதம் சம்பவங்கள் அரங்கேறி வந்துள்ளது. 

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையான இன்று காலையும் இவர்களுக்குள் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு இவர்களுக்குள் அடிதடியாக முற்றிய நிலையில், சையது இப்ராகிம் தான் வைத்திருந்த கை துப்பாக்கியால் உறவினர்களை நோக்கி சுட்டுள்ளார். 

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்த நிலையில், துப்பாக்கி சூடு சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், விசாரணை மேற்கொள்ள துவங்கியுள்ளனர். 

பின்னர் உயிருக்கு போராடிய இரண்டு நபர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஸ்டாண்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், முதற்கட்டமாக துப்பாக்கியால் இரண்டு பேரை சுட்ட சையது இப்ராகிமை கைது செய்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Ramapuram Gun fire police investigation


கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
Seithipunal