சென்னை | சர்வீஸ் அப்பார்ட்மெண்டில் ஹைடெக் விபச்சாரம்! தட்டி தூக்கிய போலீஸ்!
Chennai Prostitution case one arrest
சென்னையில் சர்வீஸ் அப்பார்ட்மெண்டில் பெண்களை வைத்து ஹைடெக் முறையில் விபச்சாரம் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட ஒருவரை இன்று போலீசார் கைது செய்துள்ளனர்.

தியாகராய நகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு சர்வீஸ் அப்பார்ட்மெண்டில், பாலியல் தொழில் நடப்பதாக காவல் ஆணையர் அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தகவலின்பேரில். அப்பார்ட்மெண்டில் அதிரடி சோதனை செய்த தனிப்படை போலீசார், அங்கு விவசாயம் நடப்பதை உறுதி செய்தனர்.

இதனையடுத்து, பெண்களை பாலியல் தொழில் ஈடுபடுத்திய கார்த்திகேயன் என்ற தரகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், பாலியல் தொழில் தள்ளப்பட்ட பெண் ஒருவரை மீட்ட போலீசார், தலைமறைவாக உள்ள அப்பார்ட்மெண்ட் உரிமையாளர் இளையராஜா என்பவரையும் புரோக்கர் பானு என்பவரையும் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
English Summary
Chennai Prostitution case one arrest