சீனாவின் வென்சாங் கோவில் சாம்பலானது! யாத்திரிகரின் சின்ன தவறு பெரும் பேரழிவாக மாறியது! வைரல் வீடியோ - Seithipunal
Seithipunal


சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் மலைச் சிகரத்தின் மீது அமைந்துள்ள புகழ்பெற்ற வென்சாங் பெவிலியன் கோவில், யாத்திரிகர்களால் எப்போதும் கொட்டிகலசமாக இருக்கும் புண்ணிய தலம். தினமும் நூற்றுக்கணக்கானோர் உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதிகளில் இருந்து வந்து வழிபாடு செய்யும் இந்த கோவில், ஒரு கண நேர அலட்சியத்தால் முழுவதும் தீக்கிரையாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மாதம் 12ஆம் தேதி பிரார்த்தனைக்காக வந்த யாத்ரீகர் ஒருவர் மெழுகுவர்த்தியை சரியான இடத்தில் வைக்காமல் பக்கத்திலேயே விட்டுவிட்டதால் விபத்து தொடங்கியது. கட்டுப்பாடின்றி உருகிய மெழுகுவர்த்தி அருகிலிருந்த அலங்காரப் பொருட்களை எரிய வைத்து, அங்கிருந்து தீ வேகமாக பரவி, மூன்று தளங்களையும் முழுமையாக ஆட்கொண்டது.

சில நிமிடங்களில் பரவிய இந்த பெரும் தீயால் கோயில் கட்டிடத்தின் பெரும்பகுதி சாம்பலாகி சேதமடைந்தது. தீயணைப்பு படையினர் பல மணி நேர முயற்சிக்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக வைரலாகி வருகிறது.

தீ விபத்து குறித்து தொடக்க விசாரணை நடைபெற்று வருவதாகவும், அது முடிந்ததும் கோவில் புனரமைப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகள் உடனடியாக தொடங்கப்படும் என உள்ளூர் நிர்வாகம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chinas Wenchang Temple Burns Ashes Pilgrim Small Mistake Turns Major Disaster Viral Video


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->