திமுக–திராவிட பாதையை பாதுகாக்க வைகோவின் புதிய பயணம் தொடக்கம்...!
Vaikos new journey protect DMK Dravidian path begins
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையில், சென்னை தாயகத்தில் ‘சமத்துவ நடைபயணம்’ தொடர்பான வீரர்கள் நேர்காணல் இன்று நடைபெற்றது.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, வரவிருக்கும் மாநிலளாவிய விழிப்புணர்வு நிகழ்ச்சியின் விவரங்களை விரிவாக விளக்கினார்.திருச்சியில் வரும் ஜனவரி 2ஆம் தேதி தொடங்கும் இந்த சமத்துவ நடைபயணம், மதுரையில் ஜனவரி 12ஆம் தேதி நிறைவடையவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

“பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தை கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தீவிரமாக சீரழிக்கின்றன. அதனால், போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் இந்தப் பயணத்தை மேற்கொள்கிறோம்,” என்றும் வைகோ கூறினார்.இந்த நடைபயணத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருச்சியில் கொடியசைத்து தொடங்கி வைப்பார்.
சுமார் ஆயிரம் வீரர்கள் தம்முடன் கலந்து கொள்ள இருப்பதாகவும், இது தன்னுடைய 11வது மாநிலளாவிய நடைபயணமாகும் என்றும் வைகோ குறிப்பிட்டார்.“சாதி, மத சச்சரவுகளை தணியும் வகையிலும், சமத்துவ உணர்வை மக்களிடையே செழிக்கச் செய்யவும் இந்தப் பயணம் உதவும்.
தமிழகம் முழுவதும் மீதமுள்ள என் வாழ்நாளை மக்களின் நலனுக்காக செலவிட தீர்மானித்துள்ளேன்,” என்று அவர் உணர்ச்சியோடு தெரிவித்தார்.மேலும், திராவிட இயக்கத்திற்கு எதிராக இந்துத்துவா சக்திகள் சவால்களை எறிந்து வரும் சூழலில், அதனை எதிர்கொள்ளும் போராட்டமாக இந்த நடைபயணம் திகழும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
2026 தேர்தலில் திமுக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று, முதல்வராக மு.க. ஸ்டாலின் தொடர்ந்தும் ஆட்சி நடத்துவார் என்ற நம்பிக்கையையும் வைகோ தெரிவித்தார். விஜய் நடத்திய கூட்டத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறாமல், அவர்களை அழைத்துக் கொண்டு வந்து ஆறுதல் தெரிவித்தது சரியான நடைமுறை அல்ல என்ற கருத்தையும் பகிர்ந்தார்.
இந்தப் பேட்டியின்போது மாவட்ட செயலாளர் ஜீவன், தொண்டர் படை தலைவர் பாஸ்கர் சேதுபதி, வக்கீல் நன்மாறன் மற்றும் கழக குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
English Summary
Vaikos new journey protect DMK Dravidian path begins