அட்டூழியத்தின் பின்னாலான பெருமிதம்! பதவி + அதிகாரம் = கொடுமை...? - திமுக செயலாளர் மீதான eps -யின் தீவிர அதிர்ச்சி புகார்...! - Seithipunal
Seithipunal


அ.தி.மு.க. பொதுச்செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டதாவது,"விழுப்புரம் அருகே, திமுக ஒன்றியச் செயலாளர் ஒருவர், ஒரு பெண்ணை கடந்த ஆறு மாதங்களாக மிரட்டி தொடர்ந்து பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியதாக வெளிவந்த செய்தி சமூகத்தையே உலுக்கும் வகையில் அதிர்ச்சியளிக்கிறது.

“காவல்துறையால் என்னை எதுவும் செய்ய முடியாது… நான் திமுகவின் முக்கிய மனிதன்” என கம்பீரம் காட்டி, தனது அரசியல் பதவியை கவசமாக பயன்படுத்தி இந்த அவலச் செயலில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில், திமுக ஆட்சி காலத்தில் பெண்களே திமுக உறுப்பினர்களிடமிருந்தே பாதுகாப்பு தேட வேண்டிய பரிதாப சூழல் ஏற்பட்டுள்ளது.

இதற்கு பொறுப்பு ஏற்கும் துணிவு பொம்மை முதல்வருக்கு உள்ளதா என EPS கேள்வி எழுப்புகிறார்.அமைச்சருக்கு நெருக்கமான அனுசரணையாளர்கள் முதல், கட்சி பதவியை ஆயுதமாகப் பயன்படுத்தும் ஒன்றியச் செயலாளர்கள் வரைஇந்த திமுக ‘பாலியல் SIR’-களை கூட கட்டுப்படுத்த முடியாத தலைவராகவே உள்ளார் இன்றைய பொம்மை முதல்வர்.

தன் கட்சியில் உள்ள காமுகர்களின் அட்டூழியத்தை அடக்க முடியாத தலைவர், தமிழக மக்களை எப்படி பாதுகாப்பார்? என EPS கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இந்த சம்பவத்தில் தொடர்புடைய திமுக ஒன்றியச் செயலாளருக்கு உடனடியாக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, “ஸ்டாலின் மாடல் திமுக அரசு” மீது EPS வலியுறுத்தி கடும் கோரிக்கை விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pride behind atrocity Position power cruelty EPSs extremely shocking complaint against DMK Secretary


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->