#CHENNAI :: இருசக்கர வாகன ஓட்டிகளே உஷார்..!! காவல்துறையின் எச்சரிக்கை..!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக இன்று மாலை முதல் ஏராளமான கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டம் நிகழ்ச்சியின் போது அசம்பாவிதங்கள் ஏற்படாத வண்ணம் தவிர்க்கும் நோக்கில் காவல்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். 

அதன்படி இன்று இரவு 9 மணிக்கு மேல் மெரினா, சாந்தோம், பெசன்ட் நகர், எலியட்ஸ், நீலாங்கரை மற்றும் பாலவாக்கம் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. சென்னையின் முக்கிய சாலைகளான காமராஜ் சாலை, வாலாஜா சாலை உள்ளிட்ட சாலைகளில் வாகனங்கள் நிறுத்த அனுமதி இல்லை. பைக் ரேசிங்கில் ஈடுபடும் நபர்களை கட்டுப்படுத்த கண்காணிக்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. 

நட்சத்திர விடுதிகளில் நடக்கும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் 18 வயதிற்கு கீழே உள்ள நபர்களை அனுமதிக்க கூடாது. புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மாலை 6 மணி முதல் இரவு 1 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போதைப்பொருட்கள் வைத்திருந்தால் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

போதையில் இருக்கும் நபர்கள் அவர்களது இடத்திற்கு செல்வதற்காக க்யூ ஆர் கோட் எனப்படும் புதிய செயல்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தனியார் நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளில் 80 சதவீத அளவிற்கு மட்டுமே வாடிக்கையாளர்களை அனுமதிக்க வேண்டுமென காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. மேலும் இருசக்கர வாகனங்களில் இரண்டு நபர்களுக்கு மேல் சென்றால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai Police warn two wheelers on New Years Event


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->