'பவர் பேங்க்' மோசடி கும்பல்., தமிழக மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்த தமிழ்நாடு காவல்துறை.! - Seithipunal
Seithipunal


சென்னை, குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை இன்று வெளியிட்டுள்ள முக்கிய செய்தி குறிப்பில், "குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை, கணினி வழி குற்றப்பிரிவில் வலைதளம் மூலம் 'பவர் பேங்க்' என்ற செயலியில் பண முதலீடு செய்து பாதிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த பவர் பேங்க் என்ற செயலி கூகுல் பிளே ஸ்டோரில் உள்ளது. 

இது நேரடியாக பொதுமக்களை குறைந்த காலத்திற்குள் இரண்டு மடங்கு பணம் தருவதாக ஏமாற்றும் வகையில் செயல்படுகிறது. 

இதன் மூலம் அதிக மக்கள் ஏமாற்றப்பட்டு பல மாநிலங்களில் இந்த பவர் பேங்க் செயலி சம்மந்தமாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த பவர் பேங்க் சம்மந்தமாக பாதிக்கப்பட்ட மக்கள் யாராவது இருந்தால் விசாரணை அதிகாரி திருமதி . A. வசந்தி, காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு குற்ற புலனாய்வு துறை, கணினி வழி குற்றப்பிரிவு, சென்னை என்பவரை தொலைபேசி எண் .9444128512 மற்றும் மின் அஞ்சல் முகவரி cbcyber@nic.in மூலம் அணுகவும். 

மேலும் மின் அஞ்சல் மற்றும் விசாரணை அதிகாரியின் அலுவலக முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

மின் அஞ்சல் : cbcyber@nic.in அஞ்சல் 

முகவரி : காவல் ஆய்வாளர், கணினி வழி குற்றப்பிரிவு, குற்றப்பிரிவு குற்ற புலனாய்வு துறை, எண்.220 , பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை -08, தமிழ்நாடு.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai police warn power bank app


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->