கொட்டி தீர்த்த கனமழை.. சென்னை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு வரை 8 மணி நேரம் பெய்த கனமழை காரணமாக பல்வேறு சாலைகளில் மழைநீர் புகுந்து வெள்ளக்காடாக மாறியுள்ளது. மேலும் பல சுரங்கப் பாதைகள் மழை நீரால் நிரம்பி உள்ளது. இதனால் வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று (31.12.2021) சென்னையில்‌ பெய்த மழையை முன்னிட்டு சென்னை பெருநகர போக்குவரத்தின்‌ தற்போதைய நிலவரம்‌.

1. மழைநீர்‌ பெருக்கு காரணமாக மூடப்பட்டுள்ள சுரங்கபாதைகள்‌ :-

1) துரைசாமி சுரங்கபாதை
2) ஆர்‌.பி.ஐ சுரங்கபாதை
3) மெட்லி சுரங்கப்பாதை
4)  ரங்கராஜபுரம்‌ இரு சக்கர வாகனங்கள்‌ சுரங்கப்பாதை.

2. மழைநீர்‌ தேங்‌கியுள்ளதால்‌ கீழ்கண்ட சாலைகளில்‌ போக்குவரத்து மெதுவாக செல்‌கின்றன.

1) கே.கே நகர்‌ - ராஜா மன்னார்‌ சாலை
2)  மயிலாப்பூர்‌ - சிவசுவாமி சாலை
3) ஈவிஆர்‌ சாலை - அப்பல்லோ மருத்துவமனை, பர்னபி சாலை சந்டுப்பு, அழகப்பா சாலை.
4) அண்ணா ரோட்டரி சர்வீஸ்‌ சாலை
5) கே.பி.தாசன்‌ சாலை
6) TTK 1வது குறுக்கு சந்து
7) ராஜரத்தினம்‌ மைதானம்‌
8) இருமலை பிள்ளை சாலை
9) பிரகாசம்‌ சாலை
10) விநாயகபுரம்‌ சந்திப்பு
11) பத்மநாபா சந்திப்பு
12) நசரத்‌ பேட்டை
13) 70 அடி சாலைஜவஹர்‌ நகர்‌

3. சாலையில்‌ பள்ளம்‌:- இல்லை

4. மாநகர பேருந்து போக்குவரத்து மாற்றம்‌:- இல்லை

5. மரங்கள்‌ ஏதும்‌ விழவில்லை.

சென்னை பெருநகரில்‌ மழைநீர்‌ தேங்கியுள்ள சுரங்கபாதை மற்றும்‌ சாலைகளில்‌ உள்ள மழைநீரை மோட்டார்‌ பம்ப்‌
செட்கள்‌ மூலம்‌ வெளியேற்றும்‌ பணி நடைமெற்று வருகிறது.

வாகனங்களில்‌ செல்லும்‌ பொதுமக்கள்‌ சாலைகளில்‌ மழைநீர்‌ தேங்கியுள்ளதால்‌ தாங்கள்‌ செல்லும்‌ இடங்களுக்கு
தகுந்தாற்போல்‌ சாலைகளை தேர்ந்தெடுத்து கவனமாக செல்லுமறு அறிவுறுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai police new alert


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->