#சென்னை || பள்ளி பருவக்காதல் ; தனித்தனியே திருமணம்., சிக்கிய பழைய காதலியை சீரழித்த கொடூரன்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள மாதவரம் பகுதியை சேர்ந்த இளம்பெண் (வயது 21) ஒருவரும், புழல் கவங்கரை பகுதியை சேர்ந்த சாம்சங் ராஜ் அந்த வாலிபரும் கடந்த 2017- ஆம் ஆண்டு ஒன்றாக பழகி வந்துள்ளனர்.

பள்ளி பருவத்திலேயே இருவரும் காதலித்து வந்துள்ளனர். அப்போது அந்த இளம்பெண்ணுக்கு 16 வயது மட்டுமே நிறைவடைந்து இருந்தது. இருப்பினும் கடந்த 2018-ஆம் ஆண்டு சாம்சன் ராஜூவிற்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. 

கடந்த 2019-ஆம் ஆண்டு மாதவரத்தில் சாம்சன் ராஜ் தன் காதலியை சந்தித்துள்ளார். அப்போது அவரிடம் சாம்சன் ராஜ் நைசாக பேசி, மாதவரம் பால்பண்ணை அருகே ஆளில்லாத ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். 

அந்த இளம் பெண்ணிற்கு குளிர்பானம் ஒன்றில் மயக்க மருந்து கலந்து கொடுத்து விட்டு உல்லாசமாக இருந்துள்ளார். இந்த சமயத்தில் அந்த இளம்பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்திருக்கிறார்.

கலந்து 2020 -ஆம் ஆண்டு அந்த இளம் பெண்ணிற்கு திருமணம் நடந்தது. அதற்குப் பிறகும் அந்தப் பெண்ணிற்கு செல்போனில் தொடர்புகொண்டு பேசிய சாம்சன் ராஜ், என்னிடம் உனது ஆபாச வீடியோ இருக்கிறது. அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டல் கொடுத்துள்ளார். 

அதிர்ச்சியில் அந்தப் பெண், சாம்சங் ராஜ் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தனது வீட்டில் வைத்து மிரட்டல் விடுத்து காதலியுடன் உல்லாசமாக இருந்திருக்கிறார்.

இதற்குப் பிறகு, பலமுறை சாம்சன் ராஜ், தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தான் கூப்பிடும் போதெல்லாம் தனியாக வர வேண்டும் என்றும் அப்படி வராவிட்டால் வீடியோவை இணையதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டல் கொடுத்துள்ளார்.

சாம்சங் ராஜுவின் கொடுமை எல்லை மீறிக்கொண்டு போனதால்,  மாதவரத்தில் உள்ள காவல் நிலையத்தில் அந்த இளம்பெண் புகார் அளித்துள்ளார். 

இந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் சாம்சன் ராஜ் மீது போக்சோ உள்ளிட்ட நான்கு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சாம்சன்  ராஜுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

chennai police arrest drama lover samsung raj


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->