தென் மாவட்டங்களில் தேர்தல் களம் அதிரடி...! முக ஸ்டாலின் நெல்லை வருகையால் நகரம் முழுவதும் டிரோன்கள் பறக்க தடை உத்தரவு...! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் களம் பரபரப்பாக இயங்கி கொண்டு இருக்கிறது.இதில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீட்டை முடித்து, வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டு தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டுகிறார்.

அந்த வகையில், இன்று மாலை சென்னையிலிருந்து தூத்துக்குடி வரை விமானத்தில் பயணம் செய்து, அங்கிருந்து நெல்லைக்கு வருகிறார். நெல்லை தெற்கு புறவழிச்சாலையில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவர் உரையாற்ற உள்ளார்.

இதைத் தொடர்ந்து கன்னியாகுமரிக்கு புறப்பட்டு அங்கு இரவு தங்கி, மறுநாள் காலை நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார்.அதன் பின்னர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொண்டு, பல்வேறு தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.

இவ்வாறு தென் மாவட்டங்களில் தொடர் பிரசார பயணம் மேற்கொண்டு, தேர்தல் களத்தை தீவிரப்படுத்துகிறார்.இதற்கிடையில், முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக செய்யப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மாநகர காவல் எல்லைக்குள் இன்று காலை முதல் நாளை மாலை வரை டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி சாதனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.குறிப்பாக முதலமைச்சரின் தென் மாவட்ட பிரசாரப் பயணம் தேர்தல் சூட்டைக் கிளப்பியுள்ளதுடன், பாதுகாப்பு ஏற்பாடுகளும் அதே அளவில் வலுப்படுத்தப்பட்டுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Election campaign southern districts Due visit mk Stalin ban flying drones throughout city imposed


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->