கோடிகளில் புரளும் ஆதவ் அர்ஜுனா! இத்தனை கோடி சொத்து மதிப்பா? பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம்! - Seithipunal
Seithipunal


2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் ஆதவ் அர்ஜுனா தாக்கல் செய்துள்ள சொத்து விவரங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேட்புமனு பிரமாணப் பத்திரத்தின் படி, ஆதவ் அர்ஜுனா மற்றும் அவரது மனைவி டெய்சி ஆகியோரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.442 கோடியை கடந்துள்ளது. இதில் ஆதவ் அர்ஜுனாவுக்கு ரூ.197 கோடி மற்றும் டெய்சிக்கு ரூ.245 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வருமான வரி விவரங்களிலும் இவர்களின் வருவாய் அளவு கவனத்தை ஈர்க்கிறது. 2023-24 நிதியாண்டில் மட்டும் ஆதவ் அர்ஜுனா ரூ.29.73 கோடி மற்றும் டெய்சி ரூ.21.24 கோடி வரி செலுத்தியுள்ளனர். கையிருப்பாக ரூ.1.69 கோடி (ஆதவ்) மற்றும் ரூ.12.22 கோடி (டெய்சி) வைத்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வங்கி சேமிப்புகளில் ஆதவ் அர்ஜுனாவுக்கு ரூ.17.53 கோடி மற்றும் டெய்சிக்கு ரூ.12.49 கோடி இருப்பு உள்ளது. பங்கு முதலீடுகளிலும் பெரும் அளவில் ஈடுபட்டுள்ள டெய்சி, 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பங்குகள் வைத்துள்ளார்.

அசையா சொத்துக்களில் சென்னை, மாமல்லபுரம், கோவை, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள், நிலங்கள் மற்றும் வணிகக் கட்டிடங்கள் உள்ளன. தங்கம் மற்றும் வைர நகைகளின் மொத்த மதிப்பும் பல கோடிகளை எட்டியுள்ளது.

மேலும், ஆதவ் அர்ஜுனா பிறருக்கு வழங்கிய கடன் தொகை மட்டும் ரூ.156 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் அவரது உறவினர்கள் மற்றும் சில பிரபலங்களுக்கும் கடன் வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அவரது பிரமாணப் பத்திரத்தில் சில குற்றவியல் வழக்குகளும் நிலுவையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெரிய அளவிலான பொருளாதார பின்னணியுடன் அரசியல் களத்தில் குதித்துள்ள ஆதவ் அர்ஜுனா, வில்லிவாக்கம் தொகுதியில் வாக்காளர்களை எப்படி கவரப் போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Arjuna who is worth crores Is his property worth so many crores The secret leaked in the affidavit


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->