கலை உலகை குலுக்கிய ஏலம்…! சாதனை மீது சாதனை…! - ராஜா ரவி வர்மா ஓவியம் ரூ.167 கோடிக்கு விற்பனை - Seithipunal
Seithipunal


புகழ்பெற்ற இந்திய ஓவியர் ராஜா ரவி வர்மா உருவாக்கிய ‘யசோதா மற்றும் கிருஷ்ணா’ என்ற அற்புதமான வண்ண ஓவியம், மும்பையில் நடைபெற்ற சர்வதேச ஏலத்தில் ரூ.167.2 கோடி என்ற அபார தொகைக்கு விற்பனையாகி கலை உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

‘சஃப்ரான் ஆர்ட்’ நிறுவனம் நடத்திய இந்த வசந்தகால ஏலத்தில், இந்த ஓவியம் நவீன இந்தியக் கலைப்பணிகளில் இதுவரை எட்டப்படாத உயர்ந்த மதிப்பை பெற்ற படைப்பாக புதிய சாதனையை பதிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு எம். எஃப். ஹுசைன் ஓவியம் ரூ.118 கோடிக்கு விற்பனையான சாதனையை இது முறியடித்துள்ளது.மேலும், ரூ.80 கோடி முதல் ரூ.120 கோடி வரை மதிப்பிடப்பட்டிருந்த இந்த ஓவியத்தை, சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் சைரஸ் எஸ். பூனாவாலா வாங்கியுள்ளார்.

“இந்த தேசிய செல்வத்தை பாதுகாக்கும் வாய்ப்பு கிடைத்தது பெருமையாகும்; பொதுமக்கள் பார்வைக்கு வைக்கும் முயற்சி மேற்கொள்வேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்,1890-களில், ரவி வர்மாவின் கலைப் பயணம் உச்சத்தை எட்டிய காலத்தில் வரையப்பட்ட இந்த ஓவியம், யசோதா பசுவிடம் பால் கறக்கும் காட்சியையும், பின்னால் சிறுவன் கிருஷ்ணன் பாலை எடுக்க முயலும் தருணத்தையும் உயிர்ப்புடன் சித்தரிக்கிறது.

இந்த படைப்பு, ரவி வர்மாவின் காலத்தால் அழியாத சிறந்த கலைச் சின்னங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

auction that shook art world Record after record Raja Ravi Varma painting sold 167 crore


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->