'சுத்தமான அரசியல்... நேர்மையான ஆட்சி'...! - அமைச்சர் ஆனந்த் பேச்சுக்குக் குவியும் ஆதரவு...! - Seithipunal
Seithipunal


சென்னை பனையூரில் அமைந்துள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் த.வெ.க.வில் இணையும் நிகழ்ச்சி உற்சாகமான சூழலில் நடைபெற்றது. இந்த இணைப்பு நிகழ்வு, கட்சியின் அமைப்பு விரிவாக்கத்திற்கான முக்கிய முன்னேற்றமாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சரும், த.வெ.க. பொதுச்செயலாளருமான என். ஆனந்த் தலைமை வகித்தார்.

அமைச்சர் வெங்கடரமணன், முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், முன்னாள் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர்.அதேபோல், முன்னாள் எம்.எல்.ஏ. சீனிவாசன், திருச்சி மேற்கு தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் மாலா, திண்டுக்கல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயக்குமார், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஹசீனா சையத் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் த.வெ.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் என். ஆனந்த், "234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வைப்புத்தொகையைப் பெற்ற ஒரே கட்சி த.வெ.க. மட்டுமே. தியாகராய நகர் தொகுதியில் நான் வெறும் நான்கு நாட்கள் மட்டுமே தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டேன். மீதமிருந்த நாட்கள் அனைத்திலும் முதல்-அமைச்சர் விஜயுடன் இணைந்து மாநிலம் முழுவதும் பிரசாரப் பணிகளில் ஈடுபட்டேன்.

மக்கள் எனக்காக அல்ல, விஜயின் மீதுள்ள நம்பிக்கைக்காகவே வாக்களித்தனர். இன்று நான் அமைச்சராக இருப்பதற்கும் முழுக் காரணம் விஜய்தான்" என்று தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர், "மக்களுக்கு நேர்மையாக சேவை செய்வதே எங்கள் அரசியலின் அடிப்படை நோக்கம். ஊழல், முறைகேடு அல்லது மக்களின் பணத்தை தவறாக பயன்படுத்தி கட்சியையோ, ஆட்சியையோ நடத்தும் எண்ணம் எங்களுக்கு ஒருபோதும் இல்லை.

எங்களிடம் யார் தவறு செய்தாலும், எந்த சமரசமும் இன்றி உடனடியாக நடவடிக்கை எடுத்து பதவியில் இருந்து நீக்குவார் என்பதை முதல்-அமைச்சர் விஜய் தெளிவாகக் கூறியுள்ளார். அந்த ஒழுக்கமும் கட்டுப்பாடும் காரணமாகவே கட்சி நிர்வாகிகள் அனைவரும் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு வருகின்றனர்" என்றார்.

மாற்றுக் கட்சிகளில் இருந்து த.வெ.க.வில் இணைந்துள்ள அனைவருக்கும் தகுதியின் அடிப்படையில் விரைவில் கட்சிப் பொறுப்புகள் வழங்கப்படும் என்றும், அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதல்-அமைச்சர் விஜய் வெளியிடுவார் என்றும் அமைச்சர் என். ஆனந்த் தெரிவித்தார்.

மேலும், புதிதாக இணைந்த நிர்வாகிகள், ஏற்கனவே கட்சியில் செயல்பட்டு வரும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, த.வெ.க.வை மேலும் வலுப்படுத்தும் பணியில் முழுமையாக ஈடுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Clean politics honest governance Support pouring Minister Anand speech


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->