முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் இல்லத்தில் துக்கம்...! மகன் மறைவுக்கு முதல்வர் விஜய் உருக்கமான இரங்கல்...! - Seithipunal
Seithipunal


மருத்துவர் கே.எம்.கே. கலீலூர் ரஹ்மானின் மறைவு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினரையும், அரசியல் வட்டாரத்தினரையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய் தனது இரங்கல் அறிக்கையை வெளியிட்டு, மறைந்தவருக்கு அஞ்சலி செலுத்தியதுடன், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,"இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீனின் மூத்த மகனும், மருத்துவருமான கே.எம்.கே. கலீலூர் ரஹ்மான் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தி தமக்கு மிகுந்த துயரத்தையும் ஆழமான மனவேதனையையும் ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

சமூக அக்கறையுடனும், மனிதநேயப் பண்புகளுடனும் வாழ்ந்து வந்த மருத்துவர் கே.எம்.கே. கலீலூர் ரஹ்மானின் மறைவு, அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், அவரை அறிந்த அனைவருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது அன்பு மகனை இழந்து பேர்துயரில் வாடும் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த இரங்கலையும் ஆழ்ந்த அனுதாபத்தையும் முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த துயரமான தருணத்தில் இறைவன் மறைந்தவரின் ஆன்மாவுக்கு சாந்தி அருளவும், இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பைத் தாங்கிக்கொள்ளும் மனவலிமையையும் துணிவையும் அவரது குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் என பிரார்த்திப்பதாகவும் தனது இரங்கல் செய்தியில் முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Muslim League leader Qader Mokhideen son died Chief Minister Vijay heartfelt condolence death his son


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->