வேட்பாளர் தேர்வு விவகாரத்தில் காங்கிரஸ் உள்கட்சிப் பூசல் தீவிரம்!பழைய ஃபார்முக்கு திரும்பிய காங்கிரஸ்! செல்வப் பெருந்தகைக்கு எதிராக திரண்ட டீம்!
Congress internal conflict intensifies over candidate selection issue Congress returns to old form Team unites against wealth glut
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர் தேர்வு தொடர்பான குழப்பம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை சத்தியமூர்த்தி பவன் அலுவலகம், ஆதரவாளர்களின் போராட்டங்களால் பரபரப்பாக மாறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், வேட்பாளர் பட்டியல் வெளியீடு தொடர்ந்து தாமதமாகி வருகிறது. இதனால் கட்சிக்குள் அதிருப்தி அதிகரித்துள்ளது. குறிப்பாக, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தயாரித்த பட்டியலுக்கு எதிராக மூத்த தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சிலர் தங்களது ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டியதுடன், முன்னாள் தலைவர்கள் கே.எஸ். அழகிரி, திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் மேலிடத்திடம் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன் தாக்கமாக, சில தலைவர்கள் நேரடியாக டெல்லிக்கே சென்று முறையிட்டுள்ளனர்.
இந்த சூழலில், சத்தியமூர்த்தி பவனில் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் குறிப்பிட்ட வேட்பாளர்களுக்கு சீட் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். போராட்டத்தின் போது ஒரு பெண் நிர்வாகி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக தடுக்கப்பட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
இதற்கிடையில், தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் மேலாண்மை குழுத் தலைவர் மாணிக்கம் தாகூர் தனது பதவியை ராஜினாமா செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது கட்சிக்குள் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
வேட்புமனு தாக்கல் முடிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வேட்பாளர் பட்டியல் குறித்த இறுதி முடிவு எடுக்க வேண்டிய ஆலோசனை கூட்டமும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. டெல்லியில் நடைபெற உள்ள அடுத்த கட்ட ஆலோசனைக்குப் பிறகு, இன்னும் 1-2 நாட்களில் இறுதி பட்டியல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Congress internal conflict intensifies over candidate selection issue Congress returns to old form Team unites against wealth glut