காதல் திருமணம் முடிந்த 3 மாதம்... தூக்கில் பிணமாக தொங்கிய பெண்மணி.. நடந்தது என்ன?..! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள பழைய பல்லாவரம் சர்ச் தெரு பகுதியை சார்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் வெங்கடேஷ் (வயது 23). இவர் அங்குள்ள கடையில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வந்தவர் திரிசூலம் பகுதியை சார்ந்த ஸ்டெல்லா (வயது 23).

இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது காதலாக மாறவே, இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். பின்னர் தங்களின் பெற்றோர்களிடம் காதல் தொடர்பான தகவலை தெரிவிக்கவே, கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாக இரண்டு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

ஸ்டெல்லா அவ்வப்போது தலைவலி பிரச்சனையால் அவதியுற்று வந்த நிலையில், இதற்காக பல மருத்துவமனைகள் ஏறி இறங்கியும் பலன் இல்லை. இதனால் கடுமையான மனஉளைச்சலில் இருந்து வந்த ஸ்டெல்லா, நேற்று காலை வீட்டில் மின்விசிறியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு வெங்கடேஷ் மற்றும் அவரது பெற்றோர்கள் தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பெண்மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Pallavaram Church Street Love Married girl Mystery Death Police Investigation


கருத்துக் கணிப்பு

தமிழக அரசின் சாதி வாரி கணக்கெடுப்பு அறிவிப்பு.
கருத்துக் கணிப்பு

தமிழக அரசின் சாதி வாரி கணக்கெடுப்பு அறிவிப்பு.
Seithipunal