அரசு பணிகளில் பெண்களுக்கு 35 சதவீத இடஒதுக்கீடு: பீகார் அமைச்சரவை ஒப்புதல்..!
Bihar cabinet approves 35 percent reservation for women in government jobs
ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதீஷ்குமார் தலைமையில் பீகார் மாநிலத்தில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. அம்மாநிலத்தில் வரும் அக்டோபர்- நவம்பர் மாதங்களில் சட்டசபை தேர்தலை நடக்க்கவுள்ளது. இந்த தேர்தலுக்காகஅரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் அம்மாநில முதலமைச்சர் நிதீஷ்குமார் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் பீகாரில் நிரந்தரமாக வசிக்கும் பெண்களுக்கு அனைத்து அரசு பணிகள் மற்றும் பதவிகளிலும் 35 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க ஒப்புதல் அளித்தது.
-5pygt.png)
அத்துடன், மாநிலத்தில் இளைஞர்களுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்து அரசாங்கத்துக்கு தேவையான ஆலோசனை வழங்க இளைஞர் ஆணையத்தை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு அரசு வேலைகளில் பெண்களுக்கு 35 சதவீத இடஒதுக்கீட்டை அரசு அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து, எந்த மாநிலத்தை சேர்ந்த பெண்களும் இதை பயன்படுத்தி கொள்ளலாம் என கூறப்பட்டது. ஆனால், தற்போது பீகார் மாநிலத்தில் நிரந்தரமாக குடியிருக்கும் பெண்களுக்கு மட்டுமே இதற்கு தகுதி என அமைச்சரவை ஒப்புதல் வழங்கி வழங்கியுள்ளது.
English Summary
Bihar cabinet approves 35 percent reservation for women in government jobs