கொரோனா தொற்றால் 48 மணி நேரத்தில் 03 பேர் பலி: மத்திய பிரதேச மாநில சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை..!
03 people die of corona infection in Indore in 48 hours
கொரோனா தொற்று காரணமாக இந்துாரில் கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 03 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை மத்திய பிரதேச மாநில சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக மாவட்ட தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி டாக்டர் மாதவ் பிரசாத் ஹசானி கூறியதாவது:
இந்துாரில் கடந்த 48 மணி நேரத்தில் 03 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளதாகவும், கொரோனா தொற்று பாதித்த மூன்று பெண்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் 64 வயதானவரும், 55 வயதுள்ள ஒரு பெண்ணும் உயிரிழந்தனர். பின்னர் நேற்று 50 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளதாக கூறியுள்ளார்.
-zly78.png)
குறித்த மூன்று பேரும் ஏற்கனவே வெவ்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதன் காரணமாக, அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விட்டது என்று தெரிவித்துள்ளார். அவர்களுக்கு ரத்த புற்று நோய், காசநோய், நீரிழிவு மற்றும் தைராய்டு கோளாறு போன்ற நோய்கள் இருந்துள்ளதால் இந்த இறப்பு நிகழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால்,பொதுமக்கள் யாரும் பீதி அடைய தேவையில்லை என்று அவர் மேலும் தெளிவுப் படுத்தியுள்ளார்.
English Summary
03 people die of corona infection in Indore in 48 hours