சென்னையில் கனமழை: போக்குவரத்து பாதிப்பு: சாலையில் நீர் தேங்கியதால் பொதுமக்கள் சிரமம்..!
Heavy rains in Chennai cause traffic disruption
சென்னையில் திடீரென மழை பெய்து வருவதால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
சென்னை உள்பட வட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில், ஜூன் மாதமே எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. வழக்கத்திற்கு மாறாக இந்த மாதம் மழை செய்யவில்லை இதனால் அதிக வெப்பம் வாட்டி வதைத்தது.
நேற்றைய தினம் சென்னையில் அதிக வெப்பம் பதிவானது. ஆனால், இன்று காலநிலை மாறிய நிலையில், இன்று மாலை சென்னையில் மிதமான மழை பெய்யும் சூழல் எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படி, தற்போது, சென்னையில் எழும்பூர், சென்ரல், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் வண்ணாரப்பேட்டை, வடபழனி, கேகே நகர், வளசரவாக்கம், நெசப்பாக்கம், கோயம்பேடு, தி.நகர், மயிலாப்பூர், தேனாம்பேட்டை, வள்ளுவர் கோட்டம், சைதாப்பேட்டை, கிண்டி, விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்கிறது.
மேலும், சென்னை புறநகர்ப் பகுதிகளான பூந்தமல்லி, குன்றத்தூர், குமணன் சாவடி, திருவேற்காடு, போரூர், அய்யப்பன்தாங்கல், வளசரவாக்கம், ராமாபுரம், மதுரவாயல் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. தற்போது மழை பெய்து வருவதால் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசலும், சாலையோரங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.
English Summary
Heavy rains in Chennai cause traffic disruption