சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்! குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்!
chennai korukkupet Sanitation workers protest Arrest
சென்னை கொருக்குப்பேட்டையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பொது வெளியில் உண்ணாவிரதம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால், அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், வீட்டிலேயே உண்ணாவிரதம் இருந்த பணியாளர்களை போலீசார் திடீரென வலுக்கட்டாயமாக கைது செய்ய முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது.
பணியாளர்கள் கைது செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்த முயன்றதால், போலீசாரும் போராட்டக்காரர்களும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரே நேரத்தில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு, பணியாளர்கள் குழுக்களாக கைது செய்யப்பட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.
போலீசின் நடவடிக்கைக்கு எதிராக தூய்மைப் பணியாளர்கள் கடும் முழக்கங்களை எழுப்பினர். “போலீஸ் அராஜகம் ஒழிக” என கோஷமிட்ட அவர்கள், தங்களது உரிமைக்கான போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம் என உறுதியளித்துள்ளனர்.
கொருக்குப்பேட்டை முழுவதும் பதற்றம் நிலவுகின்ற நிலையில், பொதுமக்களும் இந்த சம்பவத்தை கவனித்து வருகின்றனர். தூய்மைப் பணியாளர்கள் மீதான போலீசின் நடவடிக்கை குறித்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
English Summary
chennai korukkupet Sanitation workers protest Arrest