விஜயகாந்த் பெயரை இழிவுபடுத்தினால் விடமாட்டோம்… யூடியூபர்களுக்கு எதிராக தே.மு.தி.க. சட்டப் போராட்டம்...!
We not tolerate defamation Vijayakanth name DMDK launches legal battle against YouTubers
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை (தே.மு.தி.க.) குறிவைத்து சமூக வலைதளங்களில் பரவி வரும் அவதூறு கருத்துகள் குறித்து கட்சித் தலைமையகம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, தே.மு.தி.க. தலைமை நிலைய செயலாளர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. பார்த்தசாரதி சார்பில், கட்சியின் வழக்கறிஞர் அணி மாநிலச் செயலாளர் சந்தோஷ்குமார், சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் அதிகாரப்பூர்வ புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மறைந்த தலைவர் ‘கேப்டன்’ விஜயகாந்த் குறித்து யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் சிலர் ஆதாரமற்ற, தரக்குறைவான குற்றச்சாட்டுகளை பரப்பி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகைய கருத்துகள் கட்சித் தொண்டர்களின் மனதில் கடும் வேதனைக்கும் கோபத்திற்கும் காரணமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கட்சித் தொண்டர்களிடையே குழப்பம் உருவாக்கும் நோக்கில் செயல்படுவதாக குற்றம்சாட்டப்பட்ட திருச்சி சூர்யா, தமிழா தமிழா, பாண்டியன், சவுக்கு சங்கர் உள்ளிட்ட யூடியூபர்கள் மற்றும் தொடர்புடைய சேனல்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த புகார், அரசியல் வட்டாரத்தில் சமூக ஊடகங்கள் மூலம் பரவும் கருத்துக்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளுக்கு புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
English Summary
We not tolerate defamation Vijayakanth name DMDK launches legal battle against YouTubers