டிரம்ப் அபாய பட்டியல் நடவடிக்கை...! - 89 இந்தியர்கள் ‘Most Dangerous’ பட்டியலில் அதிர்ச்சி...! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் குடியேற்ற விதிமுறைகள் மீது இரும்புக்கரம் காட்டி வரும் அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு, சட்டவிரோத குடியேற்றத்தையும் குற்றச்செயல்களையும் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாக, நாட்டிலிருந்து வெளியேற்றப்பட வேண்டிய “அதிக ஆபத்தான குற்றவாளிகள்” பட்டியலை அமெரிக்க நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது.

அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை வெளியிட்ட இந்த பட்டியலில் மொத்தம் 89 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. இதில் இடம்பெற்றுள்ளவர்கள் கொலை, பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் கடத்தல், ஆயுத வர்த்தகம் உள்ளிட்ட தீவிர குற்றங்களில் ஈடுபட்டவர்கள் அல்லது நீதிமன்ற தண்டனை பெற்றவர்கள் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘Operation Safe Cities’ என்ற சிறப்பு நடவடிக்கைத் திட்டத்தின் கீழ், சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கி குற்றங்களில் ஈடுபடுபவர்களை அடையாளம் கண்டு, விரைவாக நாடு கடத்தும் பணியை டிரம்ப் நிர்வாகம் வேகப்படுத்தியுள்ளது.

இதனால் பல்வேறு நகரங்களில் திடீர் சோதனைகள் மற்றும் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பட்டியலில் இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றிருப்பது அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களிடையே அதிர்ச்சியும் பரபரப்பும் கலந்த கவலையையும் உருவாக்கியுள்ளது.

இது குடியேற்றக் கொள்கை, பாதுகாப்பு, சமூக நம்பிக்கை ஆகியவற்றைச் சுற்றி புதிய விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Trumps dangerous list action 89 Indians shockingly included Most Dangerous list


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->