தேர்தல் முன் அதிரடி நகர்வு… 17-ந்தேதி தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் தாக்கல்! - அப்பாவு - Seithipunal
Seithipunal


சட்டமன்றத் தேர்தல் சூழல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பட்ஜெட் நடவடிக்கைகள் வேகம் பிடித்துள்ளன. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், மாநிலத்தின் இடைக்கால நிதிநிலை அறிக்கைக்கு அதிகாரப்பூர்வ ஒப்புதல் வழங்கப்பட்டது.

தேர்தலை முன்னிட்டு அரசின் அடுத்த கட்ட திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகளை வெளிப்படுத்தும் முக்கிய ஆவணமாக இந்த இடைக்கால பட்ஜெட் பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து, சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், “தமிழ்நாடு சட்டசபை வரும் 17-ந்தேதி கூடுகிறது.

அதே நாளில் மாநில அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார்” என்றார்.மேலும், கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது அலுவல் ஆய்வு குழுக் கூட்டத்தில் ஆலோசித்து தீர்மானிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தேர்தல் முன் அரசின் நிதித் திட்டங்கள் வெளியாக உள்ளதால், இந்த பட்ஜெட் கூட்டத்தொட.ருக்கு அரசியல் ரீதியாகவும் அதிக கவனம் திரும்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

dramatic move ahead election Tamil Nadu interim budget presented 17th Appavu


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->