7 வருட காதல்.. 7 நிமிடத்தில் தீக்கிரையான உயிர்கள்.. வசதி கிடைத்து, காதல் கசந்ததால் சம்பவம்.! - Seithipunal
Seithipunal


காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதால், காதலின் வீட்டிற்குச் சென்று குடும்பத்தை கொளுத்திவிட்டு தானும் தீயில் கருகி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. 

சென்னையில் உள்ள கொருக்குப்பேட்டை அனந்தநாயகி நகர் பகுதியைச் வெங்கட்டம்மா. இவருக்கு ரஜிதா என்ற மகள் இருக்கிறார். வெங்கட்டம்மாவின் கணவர் சென்னை மாநகராட்சியில் பணியாற்றியபோது உயிரிழந்துள்ளார். 

இதே பகுதியைச் சார்ந்த மோகன கிருஷ்ணன் என்பவரின் மகன் சதீஷை ரஜிதா கடந்த 7 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இருவரும் தாலி கட்டிய கணவன் - மனைவி போல் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், தந்தை இறந்து போனதால் அவரின் பணி மகள் ரஜிதாவுக்கு கிடைக்கவே, தண்டையார்பேட்டையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் பணியாற்றி வந்துள்ளார். 

இதன்போது, அங்கு பணியாற்றிய வாலிபருடன் பழக்கம் ஏற்படவே, சதீஷை உதாசீனப்படுத்தி தவிர்த்து வந்ததாக தெரியவருகிறது. மேலும், அவருடன் ஜனவரி 17 ஆம் தேதி நிச்சயமும் செய்யப்பட்டுள்ளது. இதனை அறிந்த சதீஷ், காதலியிடம் சென்று நியாயம் கேட்கவே எந்த விதமான பலனும் இல்லை. 

இந்நிலையில், நேற்று கடுமையான ஆத்திரத்துக்கு உள்ளாகிய சதீஷ், அதிகாலை மூன்று மணியளவில் காதலியின் வீட்டு கூரையை பிரித்து மண்ணெண்ணெய் கேனுடன் உள்ளே குதித்துள்ளார். பின்னர் உறங்கிக்கொண்டு இருந்த ரஜிதாவை எழுப்பி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கவே, தடுக்க வந்த ரஜிதாவின் தாய் மீதும் தீப்பற்றி இருந்துள்ளது. 

இதனையடுத்து ரஜிதா, அவரது தாய் வெங்கடம்மா, ரஜிதாவின் காதலன் சதீஷ் ஆகிய மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் உள்ளே இருந்த மூவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும், தாய், மகள் மட்டும் வீட்டில் இருந்த நிலையில், மூன்றாவது நபர் யார்? என்பது தொடர்பான காவல் துறையினரின் விசாரணையில் மேற்கூறிய காதல் விவகாரங்கள் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai Korukkupet Family Murder and Youngster Suicide due to Love Failure Issue


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->