வெளுத்து வாங்கும் மழை! நாளை வரை தொடருமா? வானிலை ஆய்வு மையம் செய்வது என்ன? - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் காலை முதலே லேசான மழை பெய்து வருகிறது. ராணிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது.

வாலாஜாபேட்டை, சோளிங்கர், கலவை, நெமிலி அரக்கோணம், காவேரிப்பாக்கம் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

இதற்கிடையே, சென்னை உட்பட ஆறு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு (8.00 to 11.00 AM) மிதமான மழை பெய்யும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 10 மணி வரை மழை தொடரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை : சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலாண்டு தேர்வுகள் நடைபெறுவதால் பள்ளிகள்  வழக்கம் போல் செயல்படும் என்று, மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Kanjipuram Chengalpatttu Rain Alert 21092023


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->