சென்னையில் மாமன்னர் இராஜராஜ சோழனின் சதய விழா - போலீசாருக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அருகே மாமன்னர் இராஜராஜ சோழனின் சதய விழாவை நடத்த அனுமதி வழங்க கோரிய மனுவுக்கு, தமிழக போலீசார் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இராஜ ராஜ சேனை அறக்கட்டளையின் நிறுவனர் முரளி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். 

அவரின் அந்த மனுவில், "சோழ பேரரரசர் ராஜ ராஜ சோழனின் சதய விழா ஒவ்வொரு ஆண்டும் பெருமையாக கொண்டாடப்படுவது போல, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் மாட வீதிகளில் நவம்பர் 13-ம் தேதி கொண்டாட திட்டமிட்டு உள்ளோம்.

இதற்க்கு அனுமதிக் கோரி மயிலாப்பூர் காவல் ஆய்வாளரிடம் நாங்கள் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. மாற்று தேதியில் இந்த சதய விழா கொண்டாட அனுமதி வழங்க போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" என்று அந்த மாவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், மனுதாரரின் மனு குறித்து மயிலாப்பூர் போலீசார் உரிய பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai HC Rajaraja Cholan Birth Day


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->