#Breaking: விஜயதசமியன்று கோவில் திறக்க கூறி வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..! - Seithipunal
Seithipunal


விஜயதசமி அன்று கோவிகளை திறப்பது குறித்து தமிழக அரசே முடிவு செய்யும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு பகுதியை சார்ந்த ஆர். பொன்னுசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில், "கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. 

இதனால் ஊரடங்கில் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை முதல் சனிக்கிழமை வரை என 3 நாட்கள் வழிபாட்டு தலங்கள் மூடியிருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியா முழுவதும் நவராத்திரி திருவிழா பண்டிகை இந்தியா முழுவதும் வெகு விமர்சையாக சிறப்பாக கொண்டாடப்படும். 

15 ஆம் தேதி விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், தமிழக அரசின் உத்தரவுப்படி கோவில்களின் நடை மூடப்பட்டு இருக்கும். சென்னையில் உள்ள காசிமேடு மீன் அங்காடியை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், துர்க்கை அம்மனின் பக்தர்களின் மனதை கண்டுகொள்ளாமல் அரசு பிடிவாதமாக இருக்கிறது. இதனால் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கோவிலை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும். அதற்கான உத்தரவை நீதிமன்றம் பெற்றுத்தர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 

இன்று காலை மேற்கொண்ட விசாரணையில், தமிழக அரசு தரப்பில் பதில் மனுதாக்கல் 01:30 பதில் மனுதாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் வாதிடுகையில், "தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கொரோனா நிலவரம் குறித்து ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். 

மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசனை மேற்கொண்டதை தொடர்ந்து, அரசின் சார்பில் முடிவுகள் எடுக்கப்படும். பண்டிகை காலங்கள் வருவதால் மத்திய அரசின் அறிவுறுத்தல்படி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தல்படியே, மக்களுக்கான கட்டுப்பாடுகளாக வழிபாட்டுத்தலங்களில் பொதுமக்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது" என்று வாதிடப்பட்டுள்ளது.

இந்த வாதங்களை குறித்து வைத்துக்கொண்ட நீதிபதி மகாதேவன் அமர்வு, "விஜயதசமி அன்று கோவிகளை திறப்பது குறித்து தமிழக அரசே முடிவு செய்யும்" என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai HC Announce Tamilnadu Govt Will Decide Vijaya Dashami Festival Temple Open Issue 12 Oct 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->