சரக்கடிக்க பணம் இருக்கு.. வாடகை கொடுக்க பணம் இல்லை.. வறுமைக்காக உதவி செய்து, உயிரை விட்ட வீட்டு உரிமையாளர்கள்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள சூளைமேடு ராதாகிருஷ்ணன் நகர் தெரு பகுதியை சார்ந்தவர் சதீஷ் (வயது 35). இவர் இருசக்கர வாகனத்தை பழுது பார்க்கும் மெக்கானிக் தொழில் செய்து வரும் நிலையில், இவரது மனைவி (வயது 28) மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இதே வீட்டில் சதீஷின் தந்தையான சந்திரமோகன் (வயது 69) வசித்து வந்துள்ளார்.

இவர்களுக்கு சொந்தமாக இருந்த வீட்டில் வசித்து வரும் நிலையில், மற்றொரு வீட்டினை பெயிண்டராக பணியாற்றி வந்த நாராயணன் (வயது 55), கடந்த 20 வருடமாக வாடகைக்கு இருந்து வந்துள்ளார். இந்த வீட்டிற்கு வாடகையாக மாதம் ரூ.2,800 வழங்கி வரும் நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதமாக வாடகை கொடுக்க வழியில்லை. 

வருவாய் இல்லாமல் பாதிக்கப்பட்ட நாராயணனிற்கு, சதீஷ் ரூ.80 ஆயிரம் பணம் கடனாக கொடுத்து உதவி வந்த நிலையில், நாராயணின் மனைவி மற்றும் அவரது குழந்தைகள் பிரிந்து சென்றுள்ளனர். இதனால் கடுமனையான மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில், தினமும் மது அருந்திவிட்டு மது போதையில் வந்துள்ளார். 

சில நாட்கள் பொறுத்த வீட்டின் உரிமையாளர் சதீஷ், மது அருந்த பணம் இருந்தால், வீட்டு வாடகைக்கு பணம் இருக்க வேண்டும் அல்லவா.. என்று கூறி வாடகை கேட்டுள்ளார். முன்னதாக வழங்கிய பணத்தையும் திரும்பி கேட்கவே, இவர்களுக்குள் தகராறு எழுந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த நாராயணன் சதீஷை கத்தியால் முயற்சிக்கவே, இதனை சுகன்யா மற்றும் சந்திரமோகன் தடுக்க முயற்சி செய்துள்ளனர். சுகன்யாவின் மீதும் கத்திக்குத்து அதிகளவு விழவே, சம்பவ இடத்தில் இருந்து நாராயணன் தப்பி சென்றுள்ளான். இந்த விஷயம் குறித்து அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மூவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதில், சுகன்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழக்கவே, மற்ற இரண்டு பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தப்பி ஓடிய நாராயணனை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai girl Murder by Drunken Culprit


கருத்துக் கணிப்பு

மழையால் சென்னை தொடர்ந்து பாதிக்கப்பட யாருடைய ஆட்சி காரணம்?
கருத்துக் கணிப்பு

மழையால் சென்னை தொடர்ந்து பாதிக்கப்பட யாருடைய ஆட்சி காரணம்?
Seithipunal