சென்னை டூ டெல்லி: விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு! பயணிகள் தவிப்பு!
Chennai flight sudden engine failure passengers stranded
சென்னையில் இருந்து இன்று காலை 6 மணி அளவில் டெல்லிக்கு பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது.
இந்த விமானத்தில் பயணம் செய்யும் 164 பயணிகளும் பாதுகாப்பு சோதனைகளை முடித்துவிட்டு விமானத்தில் ஏறுவதற்காக தயார் நிலையில் இருந்தனர்.
அப்போது விமானத்தில் எந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதாக விமானி கண்டறிந்து தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து விமானம் காலை 8 மணிக்கு பின்னர் 9 மணிக்கு விமானம் புறப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் விமானத்தில் எந்திர கோளாறு சரிசெய்யப்படாததால் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது. அந்த விமானத்தில் பயணிக்க இருந்த 164 பயணிகளும் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் தவித்தனர்.
இதனால் விமான நிலைய அதிகாரிகளுடன் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட இருந்த மற்ற விமானங்களில் பயணிகளை அனுப்பி வைக்கப்பட்டது.
English Summary
Chennai flight sudden engine failure passengers stranded