வீட்டிலுள்ள பழைய பொருட்களை பெற புதிய சேவை அறிமுகம் - சென்னை மாநகராட்சி அசத்தல் அறிவிப்பு.!
chennai corporation announce new service for taking old furniture from home
சென்னை மாநகராட்சி பகுதிகளில் தினமும் 6 ஆயிரத்து 400 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இவை பெருங்குடி, கொடுங்கையூர் உள்ளிட்ட குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பயோ மைனிங் முறையில் அகற்றப்படுகிறது. இருப்பினும், வீடுகளில் குப்பை சேகரிக்க செல்லும் ஊழியர்களிடம் பொதுமக்கள் சேதம் அடைந்த பழைய நாற்காலி, சோபா உள்ளிட்ட பொருட்களை வழங்குகிறார்கள்.
இதனால், குப்பை சேகரிக்கும் பணியாளர்கள் சிரமத்தை சந்தித்து வந்தனர். அதுமட்டுமல்லாமல், வீடுகளை காலி செய்யும் போது தேவையில்லாத கட்டில், சோபா, மர இருக்கை, பழைய துணி, கட்டில், மெத்தை படுக்கைகள், மின்னணு கழிவுகள் ஆகியவற்றை குப்பை தொட்டிகளில் வீசிவிட்டு செல்கிறார்கள். இது தொடர்பாக மாநகராட்சிக்கு பல்வேறு புகார்கள் வந்தவண்ணம் உள்ளது.

இந்த நிலையில், சென்னையில் வசிக்கும் பொதுமக்கள், தங்கள் வீடுகளில் தேங்கிக் கிடக்கும் பயன்படுத்த முடியாத அல்லது தேவையற்ற பழைய பொருட்களைச் சேகரித்து அகற்றுவதற்கு ஒரு புதிய சேவையை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் வீடுகளில் உள்ள தேவையற்ற சோபா, படுக்கைகள், துணிகள் போன்றவற்றை வாகனங்கள் மூலம் மாநகராட்சி ஊழியர்கள் சேகரிப்பார்கள்.
இதற்காக 1913 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்புகொள்ளலாம். மேலும், 9445061913 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும், நம்ம சென்னை செயலியிலும் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை பதிவு செய்யலாம். இந்தக் கோரிக்கை சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு தெரிவிக்கப்படும்.
அதன்பின்னர், மாநகராட்சி ஊழியர்கள் தனி வாகனத்தில் கோரிக்கை வைத்த வீட்டுக்கு நேரடியாக சென்று தேவையற்ற பொருட்களை பெற்றுக்கொள்வார்கள். சென்னையைத் தூய்மையாக வைத்திருக்க பொதுமக்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுm endru சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
English Summary
chennai corporation announce new service for taking old furniture from home