கொட்டித் தீர்த்த மழை - ஓசூர் அரசு மருத்துவமனையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து.!!
hosur government hospital perimeeter wall collapse for rain
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்தது. நேற்று காலை வரை பெய்த இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.
அதிலும் குறிப்பாக ஓசூர் பேருந்து நிலையம், பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு ராயக்கோட்டை ரோடு சர்க்கிள், ஜி.ஆர்.டி. சர்க்கிள், பாகலூர் ரோடு உள்ளிட்ட முக்கிய இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. சூளகிரி அருகே கிருஷ்ணகிரி-ஓசூர் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால், வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தபடி சென்றது. இந்த கனமழையால் ஓசூர் பார்வதி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த அரசு கல்லூரி மாணவர் சுரேஷ் என்பவர் படுகாயமடைந்தார். தொடர்ந்து அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், தொடர் கனமழையால் ஓசூரில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. சுவர் இடிந்து விழுந்ததில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சேதமடைந்தன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
hosur government hospital perimeeter wall collapse for rain