#JustIN: பிரபல ரௌடி நாகூர் மீரான் வெட்டிப்படுகொலை.. 5 பேர் கொண்ட கும்பலால் சம்பவம்.! - Seithipunal
Seithipunal


ஆதம்பாக்கம் அருகே ரௌடி நாகூர் மீரான் 5 பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்டுள்ளான்.

சென்னையில் உள்ள ஆதம்பாக்கம் பகுதியை சார்ந்தவன் நாகூர் மீரான். இவன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. 

இவன் அப்பகுதியில் ரௌடியாக வலம் வந்த நிலையில், பல்வேறு குற்ற நிகழ்வுகளையும் செய்து வந்துள்ளான். இந்நிலையில், இன்று மாலை நாகூர் மீரானை தேடி வந்த 5 பேர் கொண்ட கும்பல், அவனை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டிச்சாய்த்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளது. 

இந்த விஷயம் தொடர்பாக ஆதம்பாக்கம் காவல் துறையினருக்கு தகவல் தெரியவரவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் நாகூர் மீரானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். 

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, 5 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர். அவர்கள் கைதான பின்னரே, நாகூர் மீரானின் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai Adambakkam Rowdy Nagore Meeran Murder by 5 Man Team Police Investigation 14 Oct 2021


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->