குடும்பத்தோடு கடலுக்கு சென்று, பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள்.. மக்களே கவனம்.. அலட்சியம் வேண்டாம்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டை கப்பல்போலு தெரு பகுதியை சார்ந்தவர் சவுந்தர்ராஜன். இவர் சமையல்காரராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் அருள் ராஜ் (வயது 19). இவர் அரியலூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பயின்று வருகிறார். இவரது மகள் துர்கா (வயது 14). இவர் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். 

இவர்கள் தற்போது தீபாவளி விடுமுறையையொட்டி சென்னையில் உள்ள நிலையில், கடற்கரைக்கு சென்று வர திட்டமிட்டுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் வசித்து வந்த பாபு என்பவரின் மகன் விஷ்ணு (வயது 14), ஜான்சன் என்பவரின் மகன் மார்ட்டின் (வயது 13) மற்றும் மகள் மார்கரெட் (வயது 13) ஆகிய 5 பெரும் பெற்றோருடன் அங்குள்ள செரியன் நகர் கடற்கரைக்கு சென்றுள்ளனர். 

அப்போது ஐந்து பெரும் கடலில் குளித்துக்கொண்டு இருந்த நிலையில், கடலில் சீற்றம் அதிகமாகி திடீரென ராட்சத அலையில் ஐவரும் சிக்கியுள்ளனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், அருகில் இருந்த மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கவே, அவர்கள் படகுடன் கடலுக்குள் சென்றுள்ளனர்.

இதில், அருள்ராஜ் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள 4 பேரின் நிலை என்ன என்று தெரியவில்லை. இவர்கள் இறந்திருக்கலாம் என்று நம்பப்படும் நிலையில், உடலை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக காசிமேடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai 5 Persons including 1 Youngster died Kasimedu Sea


கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்குAdvertisement

கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்கு
Seithipunal