புது பைக்கில் பிரேக் பிடிக்காததால் வழக்கு - ஷோரூம்க்கு அதிரடி உத்தரவிட்ட நுகர்வோர் நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


புது பைக்கில் பிரேக் பிடிக்கததால் வழக்கு - ஷோரூம்க்கு அதிரடி உத்தரவிட்ட நுகர்வோர் நீதிமன்றம்.!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள படப்பை பகுதியைச் சேர்ந்தவர் அனிதா மேரி. இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு சென்னை அம்பத்தூரில் உள்ள எஸ்விசி மோட்டார்ஸ் என்ற வாகன விற்பனை கடையில் ரூ. 80 ஆயிரம் மதிப்பில் புதிதாக இருசக்கர வாகனம் ஒன்று வாங்கியுள்ளார். இந்த வாகனம் வாங்கிய மூன்று மாதத்திலேயே பிரேக் டிஸ்க் பழுதாகி உள்ளது. 

இது தொடர்பாக அனிதா மேரி வாகனம் வாங்கிய இடத்தில் புகார் அளித்துள்ளார். அதற்கு வாகன விற்பனையாளர் டிவிஎஸ் சர்வீஸ் சென்டரில் வாகனத்தை பழுது பார்த்துக் கொள்ளுமாறுத் தெரிவித்துள்ளார். அதன் படி அனிதா மேரியும் டிவிஎஸ் சர்வீஸ் சென்டருக்கு சென்று பிரேக் டிஸ்க்கை மாற்றியுள்ளார். 

இருப்பினும், பிரேக் டிஸ்க் தொடர்ந்து மூன்று முறைக்கு மேல் மீண்டும் பழுதாகியுள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அனிதா மேரி, செங்கல்பட்டு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கை விசாரணை செய்த நுகர்வோர் நீதிமன்றம், மனுதாரருக்கு வாகனத்தை விற்பனை செய்த ஷோரூம், சர்வீஸ் சென்டர் மற்றும் வாகனத்தின் தொழிற்சாலை இணைந்து வாகனத்தின் முழு தொகையான 80 ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும்.

அத்துடன் நுகர்வோருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ஒரு லட்சம் ரூபாயும், வழக்கு செலவிற்காக 15,000 ரூபாயும் இழப்பீட்டு தொகையாக வழங்க வேண்டும் என்றும், இந்தத் தொகையை எஸ்விசி மோட்டார்ஸ், டிவிஎஸ் சர்வீஸ் சென்டர், வாகன உற்பத்தி தொழிற்சாலை உள்ளிட்ட மூன்று நிறுவனங்களும் சேர்ந்து அனிதாவிற்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

chengalpattu consumer court fined to bike show room


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->