"6 வருஷமா புள்ள இல்ல. வரதட்சணை கொடு" இளம்பெண்ணை டார்ச்சர் செய்த கணவர் குடும்பம்.. பெண் விபரீத முடிவு.!
Chengalpat women suicide For domestic violence
செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கின்ற புதுப்பட்டினம் பகுதியிலுள்ள மீனவர் குப்பத்தில் வசித்து வந்த பவுன்ராஜ் என்பவருக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பாக சுபா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது.
திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகியும் இந்த தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கவில்லை. குழந்தை பிறக்கவில்லை என்றவுடன் சுபா தான் இந்த குழந்தையின்மைக்கு காரணம் என்று கூறி அவரை குற்றம் சாட்டி கணவர் குடும்பத்தினர் துன்புறுத்தி வந்துள்ளனர்.

மேலும், சுபாவிடம் வரதட்சணை வாங்கி வரச் சொல்லி கொடுமைப்படுத்தியுள்ளனர். 6 ஆண்டுகளாக இந்த கொடுமைகளை தாங்கி வந்த சுபா ஒரு கட்டத்தில் பொறுத்துக் கொள்ள முடியாமல் தூக்கில் தொங்கி உயிரை விட்டார்.
சுபா தற்கொலை செய்து கொண்டவுடன் அதற்கு காரணமாக இருந்த கணவரின் குடும்பத்தினர் தலைமறைவாகிவிட்டனர். மகள் இறந்த துக்கத்தில் சுபாவின் பெற்றோர் கதறி அழுது மகளின் தற்கொலைக்கு காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்துள்ளனர்.
English Summary
Chengalpat women suicide For domestic violence