குப்பை மேடாக காட்சியளித்த தவெக மாநாட்டு திடல்.!! - Seithipunal
Seithipunal


நேற்று மதுரையில் த.வெ.க.வின் 2-வது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் திரளான தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் போடப்பட்டிருந்த நாற்காலிகள் மற்றும் தடுப்புகளை உடைத்து த.வெ.க. தொண்டர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.

தவெக மாநாட்டிற்காக கேரளாவில் இருந்த கொண்டுவரப்பட்ட ஏராளமான நாற்காலிகள் இனி பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்ததால், உடையாத நாற்காலிகளை மட்டும் மீண்டும் ஒப்பந்ததாரர்கள் எடுத்து சென்றனர். இது குறித்து ஒப்பந்ததாரர் ஒருவர் தெரிவித்துள்ளதாவது:-

த.வெ.க. மாநாட்டு பந்தலில் இருந்து 200 இரும்பு ராடுகளை காணவில்லை. பாதுகாப்புக்காக போட்டிருந்த தகர சீட்டுகளை உள்ளூர் மக்கள் அள்ளி சென்றுள்ளனர். எங்கள் பொருட்கள் எங்கள் கண்முன்னாலே களவு போனது.

 2, 3 வாட்டர் டேங்குகளை தலையில் வைத்து தூக்கி சென்றனர். ஏன் எடுத்துச் செல்கிறீர்கள் என்று கேள்வி கேட்டால் அடிக்க பாய்ந்தனர். காணாமல் போன பொருட்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது" என்றுத் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

chairs and barie guard brokes in tvk conference place


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->